ஜேர்மனிய தூதுவரை நாட்டிலிருந்து வௌியேற்ற வெனிசூலா தீர்மானம்

ஜேர்மனிய தூதுவரை நாட்டிலிருந்து வௌியேற்ற வெனிசூலா தீர்மானம்

ஜேர்மனிய தூதுவரை நாட்டிலிருந்து வௌியேற்ற வெனிசூலா தீர்மானம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

07 Mar, 2019 | 8:47 am

Colombo (News 1st) நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ததாகத் தெரிவித்து, ஜேர்மனிய தூதுவர் டேனியல் கிறியெனெரை (Daniel Kriener) நாட்டிலிருந்து வௌியேற்றுவதற்கு வெனிசூலா தீர்மானித்துள்ளது.

இதற்காக டேனியல் கிறியெனெருக்கு 48 மணித்தியால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இலத்தீன் அமெரிக்க நாட்டில் தஞ்சமடைந்திருந்த வெனிசூலா எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவைடோ, மீண்டும் நாடு திரும்புவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இராஜதந்திரிகளில் டேனியல் கிறியெனெரும் ஒருவராவார்.

அதேநேரம், வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக ஜூவான் குவைடோவை ஜேர்மன் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவுடன் தொடர்புடைய 77 பேருக்கான விசாவை இரத்து செய்யவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்