சில தனியார் நிறுவனங்கள் 250 வீத வட்டிக்கு நுண்கடன் வழங்குகின்றன: சந்திரிக்கா

சில தனியார் நிறுவனங்கள் 250 வீத வட்டிக்கு நுண்கடன் வழங்குகின்றன: சந்திரிக்கா

எழுத்தாளர் Bella Dalima

07 Mar, 2019 | 9:04 pm

Colombo (News 1st) சில தனியார் நிறுவனங்கள் 250 வீத வட்டிக்கு நுண்கடன் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.

வவுனியா – வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாறா இலுப்பை கிராமத்தில், வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, முறையற்ற கடன் திட்டங்கள் காரணமாக அதிகளவிலான பெண்கள் உயிரிழந்துள்ளமையை சுட்டிக்காட்டினார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயலகத்தின் ஊடாக நான்கரை வீத வட்டியில் வழங்கப்படும் இக்கடனை சுயதொழில் மேற்கொள்ள விரும்பும் எவரும் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்