மரியான் ஹேகன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

by Staff Writer 06-03-2019 | 7:34 AM
Colombo (News 1st) நாட்டிற்கு வருகை தந்துள்ள நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர் மரியான் ஹேகன் இன்று (06) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் தனது விஜயத்தின்போது நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர் கவனம் செலுத்தவுள்ளதாக, இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை, இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்காக சுமார் 7 மில்லியன்அமெரிக்க டொலர் நிதி வழங்குவதற்கு நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டிற்கு வருகை தந்துள்ள நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட சில அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் காணாமல் போனோர் அலுவலகத்தின் அதிகாரிகளுடன் நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர் மரியான் ஹேகன் கலந்துரையாடியுள்ளதாக நோர்வே உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.