அங்கம்பொர விளையாட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

by Staff Writer 06-03-2019 | 3:17 PM
Colombo (News 1st) அங்கம்பொர என அழைக்கப்படும் இலங்கைக்கே உரித்தான பாரம்பரிய விளையாட்டிற்கு உத்தியோகப்பூர்வ அந்தஸ்து வழங்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார். இதற்கமைய, இதுவரை காலமும் அங்கம்பொர விளையாட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.