English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
06 Mar, 2019 | 3:54 pm
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஹிலரி கிளிண்டன் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலரி கிளிண்டனும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஹிலரி வெற்றி பெற்று, நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்று சிறப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹிலரி தோல்வியைத் தழுவினார்.
இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலிலும் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலரி கிளிண்டன் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இதுபற்றி முதல் முறையாக கருத்து தெரிவித்த ஹிலரி கிளிண்டன், அதிபர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளார்.
‘வரும் பொதுத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால், ஜனநாயகக் கட்சியில் ஏராளமான போட்டியாளர்கள் இருப்பதால், வேட்பாளர் தேர்வில் வெற்றி பெறுவது கடினம் என்றார் ஹிலரி.
இதேபோல், நியூயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க்கும் அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
19 Jun, 2021 | 05:17 PM
17 Oct, 2019 | 03:38 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS