போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிராக புதிய திட்டம்

போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிராக புதிய தேசிய செயற்றிட்டம் நாளை அறிமுகம்

by Staff Writer 05-03-2019 | 5:53 PM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிராக புதிய தேசிய செயற்றிட்டமொன்றை நாளை (06) நாட்டிற்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தல்களை தவிர்ப்பதற்காக அறிவியல் நுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பில் நிபுணர்களுடனான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் பகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. முப்படையினர், பொலிஸார் , சுங்க அதிகாரிகள் மற்றும் கடற்பாதுகாப்பு அதிகாரிகளும் தொடர்புபடும் வகையில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். கிராம மட்டத்திலும் நாடளாவிய ரீதியிலும் போதைப்பொருள் ஒழிப்பிற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது கருத்து வௌியிட்டார். எதிர்வரும் வெசாக் பூரணை தினத்திற்கு முன்னர் கிராமிய மட்டத்தில் நிலவும் போதைப்பொருள் பாவனையை வேருடன் அழிக்க ஆவன செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.