ஐரோப்பியஒன்றிய-அமெரிக்க இராஜதந்திர நெறிமுறை நிறைவு

ஐரோப்பிய ஒன்றியம் - அமெரிக்கா இடையிலான இராஜதந்திர நெறிமுறை நிறைவு

by Staff Writer 05-03-2019 | 10:12 AM
Colombo (News 1st) ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா இடையிலான இராஜதந்திர நெறிமுறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான இராஜதந்திர முரண்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது. ட்ரான்ஸ் - அட்லான்டிக் வர்த்தக நடவடிக்கை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இராஜதந்திர நெறிமுறையை அமெரிக்கா முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட ரக வாகனங்களுக்கான தீர்வைவரி தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் சர்ச்சை நிலவி வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திரிகள் மற்றும் தூதுவர்களை அமெரிக்கா நடத்தும் முறை மாறியுள்ளதாக இந்த வருடத்தின் ஆரம்பத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவின் இராஜதந்திர தொடர்புடைய நாடுகள் பட்டியலில் ஏற்கனவே காணப்பட்டதாகவும் இருப்பினும் தற்போது சர்வதேச நிறுவனமாக தரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசெம்பர் மாதம், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ் (George HW Bush) இன் மரணசடங்கிற்கு ஐரோப்பிய ஒன்றிய உயர்ஸ்தானிகர் அழைக்கப்பட்டமையே இறுதி அழைப்பாகக் கருதப்படுவதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.