ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை மூலம் எச்.ஐ.வி தொற்றிலிருந்து விடுபட்ட இரண்டாம் நபர்

ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை மூலம் எச்.ஐ.வி தொற்றிலிருந்து விடுபட்ட இரண்டாம் நபர்

ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை மூலம் எச்.ஐ.வி தொற்றிலிருந்து விடுபட்ட இரண்டாம் நபர்

எழுத்தாளர் Bella Dalima

05 Mar, 2019 | 6:38 pm

ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை மூலம் பெர்லினைச் சேர்ந்த எச்.ஐ.வி பாதித்த நபர் அந்நோயில் இருந்து முற்றிலும் விடுபட்டிருக்கும் இரண்டாவது மனிதராக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த டிமோதி ரெய் ப்ரவுன் என்பவருக்கு ஜெர்மனியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது வரை எச்.ஐ.வி தொற்று இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.

அது முதல் ப்ரவுன் ஒருவர் மட்டுமே எச்.ஐ.வி பாதித்து அதில் இருந்து முற்றிலும் விடுபட்ட ஒரே மனிதராக அறியப்பட்டு வந்தார்.

இந்த ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை என்பது மிகவும் அபாயமான சிகிச்சையாகவும், பல நோயாளிகளுக்கு செய்து தோல்வி அடைந்த முறையாகவும் இருக்கிறது.

தற்போது இரண்டாவது நோயாளிக்கு இந்த சிகிச்சை முறை பலனளித்திருக்கிறது. எனினும், அவரது அடையாளம் வெளியிடப்படவில்லை. இதன் மூலம் எச்.ஐ.வி-க்கு மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கருத முடியாது. எனினும், அதனை ஒழிக்க ஒரு பாதை இருக்கிறது. அதை வெற்றிப்பாதையாக மாற்ற இன்னும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்