பேய் மாமாவாக களமிறங்கும் வடிவேலு

பேய் மாமாவாக களமிறங்கும் வடிவேலு

பேய் மாமாவாக களமிறங்கும் வடிவேலு

எழுத்தாளர் Bella Dalima

05 Mar, 2019 | 6:26 pm

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு ‘பேய் மாமா’ என தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சில காலம் நடிக்காமல் ஒதுங்கி இருந்த வடிவேலு ஒரு முழுநீள காமெடி படம் மூலம் மீண்டும் களம் இறங்குகிறார். சக்தி சிதம்பரம் இயக்கும் இந்த படத்திற்கு ‘பேய் மாமா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலோடு வடிவேலு இருக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது. ஆனால், அந்த போஸ்டர் பொய்யான ஒன்று என்று பின்னர் செய்தி வௌியானது. விரைவில் சக்தி சிதம்பரம் – வடிவேலு இணையும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வௌியாகலாம்.

இருவரும் ஏற்கனவே இணைந்த என்னம்மா கண்ணு, காதல் கிறுக்கன், இங்கிலீஷ்காரன், வியாபாரி படங்களின் காமெடி பகுதிகள் இன்னும் பேசப்படுகின்றன என்பதால் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்