by Fazlullah Mubarak 04-03-2019 | 1:49 PM
மலேசியன் எயார்லைன்ஸின் MH 370 ரக விமானத்தில் பயணித்த பயணிகளை நினைவுகூர்ந்து அவர்களது குடும்பத்தினர் நேற்று மாலை விசேட நினைவுகூறல் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
மார்ச் 8ம் திகதியே MH 370 விமானம் காணாமல் போன நாளாகும். இதுவரை விமானத்திற்கு என்ன நடந்தது என்பதை யாரும் அறியார். உறவுனர்களைக் காணாது ஏங்குகின்றனர் உறவுகள்.
மலேசியன் எயார்லைன்ஸ் விமானமான MH 370 இல் பயணித்த பயணிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நேற்று கோலாலம்பூரில ஒன்றுகூடினர்.
தமது உறவுகள் விமானத்துடன் சேர்ந்து காணாமல் போய் ஐந்தாவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இவர்கள் ஒன்றுகூடியிருந்தனர்.
இந்நிலையில், தமது உறவுகள் காணாமற் போகவில்லை எனவும் அவர்களைத் தேடும் பணிகளில் அனைவரும் மேலும் ஆர்வத்துடன் ஈடுபடுமாறும் அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.
மலேசிய தலைநகரான பெய்ஜிங்கிற்கு 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி போயிங் 777 விமானம் சென்று கொண்டிருந்த வேளை தென்னிந்திய பெருங்கடலின் மேலால் சென்று கொண்டிருக்கும் போது காணாமல் போனது.
சீனா, மலேசியா, அவுஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் இருந்து 239 பேரை இந்த விமானம் ஏற்றிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விமானத்திற்கு என்ன நடந்தது? என்பது வரலாற்றில் மிகப்பெரிய தீர்க்கப்படாத புதிர்களில் ஒன்றாக இதுவரை தொடர்கின்றது.
விமானத்தின் கறுப்பு பெட்டிகள் கூட இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் அமெரிக்காவின் தனியார் நிறுவனம் ஒன்று ஏற்கனவே கடல்சார் தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தது.
எனினும், கடந்த ஜூன் மாதம் எவ்வித முடிவுகளுமின்றி தேடுதல் நடவடிக்கை கைவிடப்பட்டிருந்தது.
"நாங்கள் தேடுவதைத் தொடர வேண்டும், இங்கே எல்லோரையும் மனதில் வைத்து எம்.எச். 370 என் உயிரை காப்பாற்ற முயற்சிக்கிறோம், பறக்கின்ற அனைவரின் மனதிலும் நாங்கள் இருக்கிறோம்" என்று நேற்று ஒன்றுகூடிய மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.