கட்சி தொடர்பான தகவல்கள் இணையத்தளத்தில் உள்ளடக்கம்

அரசியல்கட்சி தொடர்பான தகவல்கள் இணையத்தளத்தில் உள்ளடக்கம்

by Staff Writer 04-03-2019 | 4:41 PM
Colombo (News 1st) அரசியல் கட்சிகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் உள்ளடக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கட்சி யாப்பு, கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்ட கணக்கறிக்கை மற்றும் கட்சிகளின் அதிகாரிகள் குழு தொடர்பான தகவல்களையும் இணையத்தளத்தில் உள்ளக்கவுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். மொஹம்மட் தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான கட்சிகளின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கட்சிகளிலிருந்து கிடைக்கும் பதில்களுக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹம்மட் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்