அபிநந்தனுக்கு "அஹிம்ஸா" விருது

அபிநந்தனுக்கு ''அஹிம்ஸா" விருது

by Fazlullah Mubarak 04-03-2019 | 8:41 AM

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் 3 நாட்களுக்குள் முழு உலகிலும் பேசப்பட்டவராக மாறியவர்.

அவருக்கு தற்போது இந்தியாவின் அஹிம்சா விருது வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தான் வசமிருந்து விடுவிக்கப்பட்டுள்ள விங் கொமாண்டர் அபிநந்தனுக்கு இவ்வாறு அஹிம்சா விருது வழங்கப்படவுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சில நாட்களுக்கு முன் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தான் நோக்கி சென்ற இந்திய விமானி அபிநந்தனின் மிக்-21 விமானம் பாகிஸ்தானில் வீழ்ந்த நிலையில் பாதுகாப்பாக கீழே குதித்த விமானி அபிநந்தன் பாகிஸ்தான் பாதுகாப்பு பிரவினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் பாகிஸ்தான் 3 நாட்களுக்குப் பின்னர் நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி அபிநந்தனை விடுதலை செய்திருந்தது. இந்நிலையில், இந்தியாவுக்கு மீள வருகை தந்த அவருக்கு அகில பாரதிய திகம்பர் ஜெய்ன் மஹா சமிதி என்ற அமைப்பு மஹாவீர் அஹிம்சா என்ற விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 17ஆம் திகதி மகாவீர் ஜெயந்தி தினத்தையொட்டி குறித்த விருது அபிநந்தனுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த விருதுடன் இந்திய ரூபாய்களில் 2,51,000 ரூபாய் தொகையும் சான்றிதழும் வழங்கப்படும் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.