அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த காணி இன்று விடுவிப்பு

by Staff Writer 04-03-2019 | 9:12 PM
Colombo (News 1st) கடந்த 30 வருட காலமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த 19.72 ஏக்கர் காணி இன்று (04) விடுவிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கில் 3 கிராமசேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட 19.72 ஏக்கர் காணியே இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. இவற்றுள், ஜே 251 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டித்துறை வடக்கில் - 3 ஏக்கர் 170 பேர்ச்சஸ் ஜே 253 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பலாலி கிழக்கில் - ஒரு ஏக்கர் 120 பேர்ச்சர்ஸ் ஜே 246 கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 13 ஏக்கர் 155 பேர்ச்சர்ஸ் காணியும் இதனுள் அடங்குகின்றன. தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி லெப்டினன் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியினால் காணிக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். இந்தநிலையில், 2015 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 4,000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக, யாழ், மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.