by Fazlullah Mubarak 04-03-2019 | 8:02 AM
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்குமாறு, கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மனு ஒன்று அனுப்பட்டுள்ளது.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் உறுப்பினர் ஒருவர் இந்த முறைப்பாட்டினை முன்வைத்துள்ளதாக, ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முறிகள் மோசடியுடன், பிரதமருக்கும் தொடர்பிருப்பதாக தற்போது தகவல் வௌியாகியுள்ள நிலையில், அது குறித்து பிரதமரிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்குத் தேவையான அனைத்துத் தரவுகளையும் வழங்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் குறிபிட்டுள்ளார்.
இந்த மனுவை, ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன உள்ளிட்ட குழுவினருக்கு அடுத்த வாரமளவில் கையளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இதன்பின்னரே முறைப்பாடு குறித்து விசாரணை செய்வதா இல்லையா என்ற தீர்மானம் எட்டப்படும் எனவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.