English
සිංහල
எழுத்தாளர் Fazlullah Mubarak
04 Mar, 2019 | 8:55 am
சிவபெருமானுக்காக நித்திரையைத் தவிர்த்து, உண்ணாவிரதம் இருந்து தியானத்தின் மூலம் தமது ஆன்மீக ஒழுக்கத்தை அடைவதற்காக செயற்படும் ஒரு மத ரீதியான புனித நாளாகவே சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
நாட்டிலும், உலகளாவிய ரீதியிலும் வாழ்ந்துவரும் இந்து பக்தர்களின் அந்த ஆன்மீக பிரார்த்தனை நிறைவேறி அவர்களின் வாழ்க்கை நல்வழிப்படும் பட்சத்தில் அது அவர்களுடன் இணைந்து வாழும் ஏனைய சமூகத்தவர்களின் வாழ்க்கையிலும் ஔியேற்றுவதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், அது மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கும் வழிவகுக்கும் எனவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஏற்றப்படும் தீபத்தினால் உலகின் இருள் நீங்குவதைப் போன்று உலகவாழ் இந்து மக்களின் இதயங்களில் இருள் நீங்கி ஔிபெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
இன, மத, கலாசார பல்வகைமையின் அழகு மற்றும் பெறுமதியை அறிந்துகொள்வதற்கு மகா சிவராத்திரி தினம் நம் அனைவருக்கும் பிரகாசத்தின் தினமாக அமையும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மஹா சிவராத்திரி தினத்தை மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் இந்து மக்களுக்காக பிரார்த்திப்பதுடன், ஆன்மீக விடுதலை மூலம் சாந்தி, சமாதானம் நிலைபெற வேண்டும் என வாழ்த்துவதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்து மதத்தில் காணப்படுகின்ற சிறந்த அனுஷ்டானங்களும் விழாக்களும் மக்களை ஒற்றுமைப்படுத்துவதுடன் மாத்திரமின்றி இலங்கை மக்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்திக்கொள்வதற்கும் துணைபுரிவதாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இப் புனித மஹா சிவராத்திரி தினத்தில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபடுகின்ற
அனைவருக்கும் இறைவனின் அருட்கடாட்சமும் அருளும் கிட்ட வேண்டும் எனவும், சுபீட்சம்
மற்றும் ஒற்றுமை என்பவற்றின் தாத்பரியத்தை பிரதிபலிக்கச் செய்கின்ற விழாவொன்றினைக்
கொண்டாடுவதற்கு வாய்ப்புக்கிட்ட வேண்டும் எனவும் பிரார்த்திப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து சமூகங்களுக்கு இடையிலும் நட்புறவுமிக்க அன்பு கலந்த உறவுகள் வலுவடைந்து
சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதற்குரிய காலமொன்று உருவாக வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
28 Jan, 2021 | 08:20 PM
28 Jan, 2021 | 06:02 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS