ஏ.கே.203 இந்தியாவுக்கு உதவும் – புட்டின்

ஏ.கே.203 இந்தியாவுக்கு உதவும் – புட்டின்

ஏ.கே.203 இந்தியாவுக்கு உதவும் – புட்டின்

எழுத்தாளர் Fazlullah Mubarak

04 Mar, 2019 | 8:46 am

“ஏ.கே – 203 ரக துப்பாக்கிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு உதவும்” என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியின் இந்த அறிவிப்புக்கு மத்தியில் ஏ.கே.203 ரக தொழிற்சாலையால் நாட்டின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன் அடுத்துவரும் 70 வருடங்களுக்கு இராணுவ தளவாடங்களை ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் உற்பத்தி செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தொழிற்சாலை மூலம் தயாரிக்கப்படும் முதல் 7 இலட்சம் ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் இந்தியாவின் பயன்பாட்டுக்காக தயாரிக்க எதிர்பார்க்கப்டுவதுடன் அதன்பின் தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சியின்போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் கடிதத்தை இந்திய பாதுகாப்பு அமைச்சர் வாசித்ததுடன் அதில் ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு உதவும் என புட்டின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்