படைப்புழுவால் அழிவடைந்த சோளச் செய்கைக்கு இழப்பீடு

படைப்புழுவால் அழிவடைந்த சோளச் செய்கைக்கு இழப்பீடு

by Staff Writer 03-03-2019 | 12:29 PM
Colombo (News 1st) படைப்புழுவினால் அழிவடைந்த சோளச்செய்கைக்கு இழப்பீடுகளை வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என, விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. மாகாண விவசாய பணிப்பாளரினால் மதிப்பீட்டு அறிக்கைகள் அனுப்பட்டுள்ளதாக சபையின் பணிப்பாளர் நாயகம் பண்டுக வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். அம்பாறை மாவட்டத்தில், படைப்புழுவினால் அழிவடைந்த செய்கைகள் தொடர்பிலான மதிப்பீட்டு நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கான 3 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பண்டுக வீரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை அளவில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவுபெறும் எனவும் விவசாய காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 10 ஆம் திகதி, விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அழிவடைந்த சோளச் செய்கைக்காக, ஒரு ஏக்கருக்கு 40,000 ரூபா இழப்பீடு வழங்கப்படும் என பண்டுக வீரசிங்க தெரிவித்துள்ளார்.