சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 03-03-2019 | 6:28 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. வவுச்சர் ஊடாக பாடசாலை சீருடை வழங்கும் தீர்மானத்தால் 500 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜக்ஸ தெரிவித்துள்ளார். 02. ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் கொடுப்பதில் தமக்கு உடன்பாடில்லை என மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். 03. ரயிலில் மோதுண்டு யானைகள் உயிரிழப்பதைத் தவிர்க்க கிழக்கு மற்றும் மன்னார் ரயில் மார்க்கங்களில் தன்னியக்கத் தொடர்பாடல் கருவிகளைப் பொருத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 04. போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கு விசேட நீதிமன்றமொன்றை ஸ்தாப்பிப்பது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். 05. திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளரான மொஹமட் மொஹுதீன் ரஹ்மான் ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. பாகிஸ்தான் இராணுவத்தினர் தம்மை நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள் எனவும் அவர்கள் நடத்தை மிகவும் தொழில்முறையுடன் இருந்ததாகவும் இந்திய விமானி அபிநந்தன் கூறியுள்ளார். 02. தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன், அல்கைதா தீவிரவாத அமைப்பின் அடுத்த தலைவராக வர வாய்ப்புள்ளதாக ஐ.நா, பாதுகாப்பு பேரவை எச்சரித்துள்ளது.