பாகிஸ்தானுக்கான விமானசேவை தொடர்ந்தும் இடைநிறுத்தம்

பாகிஸ்தானுக்கான விமான சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம் 

by Staff Writer 02-03-2019 | 3:41 PM
Colombo (News 1st) பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான விமான சேவைகள் நாளை மறுதினம் (04) வரை முன்னெடுக்கப்பட மாட்டாது என ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பதற்ற நிலையை அடுத்து பாதுகாப்பின் காரணமாக விமானப் பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் வான்பரப்பு மீண்டும் திறக்கப்படும் பட்சத்தில், இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்