இலங்கைக்கு கால அவகாசம் கொடுப்பதில் உடன்பாடில்லை: மாவை சேனாதிராசா

இலங்கைக்கு கால அவகாசம் கொடுப்பதில் உடன்பாடில்லை: மாவை சேனாதிராசா

எழுத்தாளர் Bella Dalima

02 Mar, 2019 | 8:37 pm

Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் கொடுப்பதில் தமக்கு உடன்பாடில்லை என தமிழரசுக் சட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை கட்சிகள் பங்கேற்ற கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இக்கட்சிகள் ஐ.நா மனித உரிமை அமர்வில் தமிழர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கூடி ஆராய்ந்தன.

இந்த நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று இடம்பெற்றது.

இந்தக் கூட்டம் சுமார் 2 மணித்தியாலங்களாக இடம்பெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்