விசா இன்றி தங்கியிருந்தால் 500 டொலர் அபராதம்

விசா இன்றி நாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு 500 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்க தீர்மானம்

by Staff Writer 01-03-2019 | 4:38 PM
Colombo (News 1st) விசா இன்றி நாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு 500 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட வரைபுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்தார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விசா காலாவதியாகியதன் பின்னர் சலுகை அடிப்படையில் வௌிநாட்டவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படும். எனினும், வழங்கப்படும் கால அவகாசத்திற்குள் விசாவை புதுப்பித்துக்கொள்ளாத வௌிநாட்டு பிரஜைகளுக்கு தற்போது விதிக்கப்படும் அபராதத்தை விட அதிக அபராதத்தை விதிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச நாடுகளில் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் ஜே.சி. அலவத்துவல சுட்டிக்காட்டினார்.