வட மாகாண கல்வி நிலை தொடர்பில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கருத்து

by Bella Dalima 01-03-2019 | 8:22 PM
Colombo (News 1st) வட மாகாண கல்வி நிலை தொடர்பில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று கருத்து வௌியிட்டார். அவர் தெரிவித்ததாவது,
26 பில்லியன் கொண்ட வட மாகாண வரவு செலவுத் திட்டத்தில் 60 சதவீதம் செலவு கல்வியின் மேல் உள்ளது. அந்தளவு பணப்பொருளை, நேரத்தை, மனித சிரமத்தை நாங்கள் இயக்கினாலும், வட மாகாணத்தின் கல்வி நிலை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையிலேயே இருக்கின்றது. மாகாணங்கள் என்று பார்க்கும் பொழுது 6 ஆவது இடத்திலும் மாவட்டம் என்ற ரீதியில் பார்க்கும் போது 22 ஆவது இடத்திலும் இருக்கின்றது. பாரிய அழிவுகளில் ஒன்று தான் கல்வி இல்லாமற்போவது.
என தெரிவித்தார். யாழ். பெரியபுலம் மகா வித்தியாலயத்திற்கான புதிய கட்டட திறப்பு விழா நிகழ்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்த கட்டடத்தை வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று திறந்து வைத்தார்.