மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங்

by Staff Writer 01-03-2019 | 5:34 PM
Colombo (News 1st) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். விஜயராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் பாகிங்தானுக்கும் இடையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை எனவும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதே தமது நோக்கம் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் எதிர்க்கட்சித் தலைவரிடம் கூறியுள்ளார். தனது ஆட்சிக்காலத்தின் போது இந்திய அரசாங்கத்தால் சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பிற்கு தமது நன்றிகளை மஹிந்த ராஜபக்ஸ இதன்போது தெரிவித்துள்ளார். எனினும், தற்போதைய அரசாங்கத்தால் குறித்த செயற்றிட்டம் கைவிடப்பட்டுள்ளமை தொடர்பில் தாம் கவலை அடைவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்