மன்னார் மனிதப் புதைகுழிகள்: வழக்கு ஒத்திவைப்பு

மன்னார் மனிதப் புதைகுழிகள்: வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

by Staff Writer 01-03-2019 | 7:00 PM
Colombo (News 1st) மன்னார் சதொச வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பிலான வழக்கு 05 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் எந்த காலப்பகுதிக்குரியவை என்பதை உறுதிப்படுத்துவதற்காக அமெரிக்காவின் பீட்டா அனலைசிங் நிறுவனத்திடம் வழங்கப்பட்ட மாதிரிகளின் அறிக்கை கடந்த 15 ஆம் திகதி கிடைக்கப்பெற்றது. கார்பன் பரிசோதனைக்காக வழங்கப்பட்ட 6 மாதிரிகளில் 5 மாதிரிகளின் அறிக்கையே கிடைக்கப்பெற்றுள்ளது. மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று சமூகமளிக்காமையால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, மன்னார் - திருக்கேதீஸ்வரம் பகுதியிலுள்ள மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மன்னார் பதில் நீதவான் ஏ.எச்.எம். கையூஸ் செல்டானோ முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் எக்காலப்பகுதிக்குரியவை என்பதை அறிவதற்கு அதனை கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.