மட்டக்களப்பிற்கான உள்ளூர் விமான சேவை ஆரம்பம்

மட்டக்களப்பிற்கான உள்ளூர் விமான சேவை ஆரம்பம்

by Staff Writer 01-03-2019 | 8:11 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு மட்டக்களப்பிற்கான உள்ளூர் விமான சேவை இன்று முன்னெடுக்கப்பட்டது. வாராந்தம் திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் இந்த உள்ளூர் விமான சேவை இடம்பெறவுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளை நேரடியாக அங்கிருந்து கிழக்கு மாகாணத்திற்கு அழைத்து வரும் நோக்கில் இந்த உள்ளூர் விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.