பெருவில் 7.1 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பெருவில் 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

by Bella Dalima 01-03-2019 | 5:10 PM
பெருவில் 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பெருவின் தென் பகுதியில் அதிகாலை 3.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு அசாங்கரோ பகுதியிலிருந்து 27 கிலோமீட்டர் தூரத்தில் 260 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக எவ்வித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பதுடன், பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. தென் அமெரிக்க நாடான பெருவில் வருடத்திற்கு சுமார் 200 நிலநடுக்கங்கள் வரை ஏற்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மக்களால் உணரப்பட முடியாதவை. முன்னதாக, பெருவில் 2007 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.