ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு: ஜம்மியத்துல் உலமா சபை உறுதி

ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு: ஜம்மியத்துல் உலமா சபை உறுதி

ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு: ஜம்மியத்துல் உலமா சபை உறுதி

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2019 | 7:00 pm

Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உறுதியளித்துள்ளது.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி முன்னிலையில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் ரிஷ்வி முஃப்தி இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.

மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட அசாத் சாலியை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் போதைப்பொருளுக்கு எதிராக மாகாண ஆளுநர் அசாத் சாலி முன்னெடுக்கும் நடவடிக்கைகளையும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பாராட்டியுள்ளது.