இலங்கைக்கு – தென்னாபிரிக்கா இடையிலான இறுதியான 20 க்கு 20 கிரிக்கெட் தொடர்

இலங்கைக்கு – தென்னாபிரிக்கா இடையிலான இறுதியான 20 க்கு 20 கிரிக்கெட் தொடர்

இலங்கைக்கு – தென்னாபிரிக்கா இடையிலான இறுதியான 20 க்கு 20 கிரிக்கெட் தொடர்

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2019 | 7:47 am

Colombo (News 1st) இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 க்கு 20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று (24ஆம் திகதி) ஜொஹன்னஸ்பேர்கில் நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும் ஒரு போட்டி எஞ்சிய நிலையில், தென்னாபிரிக்கா 2 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

இலங்கைக்கு எதிராக 2 ஆவது போட்டியில் களமிறங்கிய தென்னாபிரிக்க குழாத்தினரே இன்றைய போட்டியிலும் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இலங்கை அணியின் சதீர சமரவிக்ரம மற்றும் ஹசித பெர்னாண்டோ ஆகியோர் இன்றைய போட்டிக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

அவிஷ்க பெர்ணான்டோ மற்றும் ஜெப்ரி வென்டர்சனுக்கு பதிலாக அவர்கள் குழாத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.