பிரபல பாதாளக்குழு உறுப்பினரான தெமட்டகொட ருவன் உள்ளிட்ட 8 பேர் கைது

by Staff Writer 28-02-2019 | 5:59 PM
Colombo (News 1st)  குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல பாதாளக்குழு உறுப்பினரான தெமட்டகொட ருவன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த 8 பேரில் பாகிஸ்தான் தம்பதியினரும் அடங்குகின்றனர். சந்தேகநபர்களிடமிருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள், பணம் எண்ணுவதற்கு பயன்படுத்தப்படும் 2 கருவிகள், 4 கிராம் ஹெரோயின் மற்றும் 3 சொகுசு வாகனங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. தெமட்டகொட பகுதியிலுள்ள வீடு சுற்றிவளைக்கப்பட்டபோதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தெமட்டகொட ருவன் என்பவர் பிரபல பாதாளக்குழுத் தலைவரான தெமட்டகொட சமிந்தவின் சகோதரர் என பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்