by Staff Writer 28-02-2019 | 4:46 PM
Colombo (News 1st) தென் மாகாண சபை உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமாரவை பிணையில் விடுவிக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலி பிரதம நீதவான் ஹர்ஷன கெகுனவெ முன்னிலையில் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
25,000 ரூபா ரொக்கப்பிணையிலும் தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
16 வயதான சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அக்மீமன பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய தென் மாகாண சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.
சட்டத்தரணியூடாக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.