புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

28 Feb, 2019 | 6:04 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. தற்போதைய அரசாங்கம் இருக்கும் வரையில் ஊழல்வாதிகளுக்கு தண்டனை கிடைக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

02. இலங்கையிலிருந்து லாஹூர் மற்றும் கராச்சி நோக்கி முன்னெடுக்கப்படவிருந்த விமானப் பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

03. பாதாள உலகக்குழு தலைவரான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மேலும் ஒரு மாதத்திற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

04. கணக்காய்வு சட்டமூலம் இதுவரை நிறைவேற்றப்படாதமையால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாக, கணக்காய்வு சேவை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

05. இலங்கையில் இடம்பெற்ற மிகப்பெரிய மோசடியான மத்திய வங்கியின் முறிகள் மோசடி இடம்பெற்று 4 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

06. இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக சிரேஷ்ட நிர்வாகியான உபாலி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

07. அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றியம் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டது.

வௌிநாட்டுச் செய்திகள்

01. பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

02. இந்தியாவின் 2 ஜெட் விமானங்களை சுட்டுவீழ்த்தியுள்ளதாக, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

03. நைஜீரிய ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி முஹம்மது புஹாரி வெற்றி பெற்றுள்ளார்.

04. அமெரிக்கா – வட கொரியா இடையிலான இரண்டாவது உச்சிமாநாடு ஆரம்பமாகியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்