பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் சொத்து விபரங்களை வௌிப்படுத்தினர் 

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் சொத்து விபரங்களை வௌிப்படுத்தினர் 

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2019 | 5:45 pm

Colombo (News 1st) இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று தமது சொத்து விபரங்களை வௌிப்படுத்தியுள்ளனர்.

தற்போதைய சூழலில் அவர்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய விபரங்களை பகிரங்கப்படுத்துவதற்கு குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர்களான தாரக்க பாலசூரிய, வாசுதேவ நாணயக்கார, எம்.ஏ.சுமந்திரன், விதுர விக்ரமநாயக்க மற்றும் இரான் விக்ரமரத்ன ஆகியோரே தமது சொத்து விபரங்களை இன்றைய தினம் வௌியிட்டனர்.

ட்ரான்பெரன்ஸி இன்டர்நேஷனல் கடந்த பல வருடங்களாக மேற்கொண்ட முயற்சியின் பலனாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை வௌியிட்டுள்ளனர்.

தன்னிச்சையாக சொத்து விபரங்களை வௌியிடுவதற்கு முன்வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டுக்குரியவர்களாவர்.

இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை வௌிப்படுத்துவதற்கு முன்வர வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.

 

சொத்து விபரங்களை பார்வையிட…

http://www.tisrilanka.org/MPassets/


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்