பாகிஸ்தானுக்கான விமானப் பயணங்கள் இரத்து

பாகிஸ்தானுக்கான விமானப் பயணங்கள் இரத்து

பாகிஸ்தானுக்கான விமானப் பயணங்கள் இரத்து

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2019 | 7:04 am

Colombo (News 1st) நாட்டிலிருந்து, லாஹூர் மற்றும் கராச்சி நோக்கி இன்று (28) முன்னெடுக்கப்படவிருந்த விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஶ்ரீலங்கன் விமான சேவையின் தொடர்பாடல் முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து கராச்சி நோக்கி பயணிக்கவிருந்த UL – 183 மற்றும் கொழும்பிலிருந்து லாஹூர் நோக்கி பயணிக்கவிருந்த UL – 185 ஆகிய விமானங்கள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மறு அறிவித்தல் விடுக்கும் வரை விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பாகிஸ்தானின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்