கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2019 | 1:49 pm

Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை இரவு 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு – 13,14,15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்தக் காலப்பகுதியில் கொழும்பு – கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் கழிவுநீர் செயற்றிட்டம் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்