குவைத் சென்ற 52 பெண்கள் நாடு திரும்பல்

குவைத்திற்கு பணிப்பெண்களாக சென்று சித்திரவதைக்குள்ளான 52 பெண்கள் நாடு திரும்பல்

by Staff Writer 28-02-2019 | 3:32 PM
Colombo (News 1st)  குவைத்திற்கு பணிப்பெண்களாக சென்று அங்கு பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகிய 52 பெண்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் இரண்டு பெண்கள் 6 வருடங்களுக்கு மேல் குவைத்தில் பணிபுரிந்துள்ளமை தெரியவந்துள்ளது. ஏனைய அனைத்து பெண்களும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலப்பகுதியில் குவைத்தில் பணிபுரிந்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெண்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் இந்த பெண்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்