எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வத்திற்கே இரட்டை இலை சின்னம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வத்திற்கே இரட்டை இலை சின்னம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வத்திற்கே இரட்டை இலை சின்னம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

எழுத்தாளர் Bella Dalima

28 Feb, 2019 | 4:26 pm

எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வத்திற்கே இரட்டை இலை சின்னம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோருக்கே இரட்டை இலை சின்னம் உரித்தாகும் என டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சசிகலா – டிடிவி தினகரன் தரப்பினரால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது சரி என இதன்போது நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இரட்டை இலை விவகாரத்தில் சிறந்த தீர்ப்பு கிடைத்துள்ளதானது மகிழ்ச்சியளிப்பதாக முதலமைச்சர் பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்