ஆசிரியர் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு நீர்த்தாரைப் பிரயோகம்

by Staff Writer 28-02-2019 | 12:07 PM
Colombo (News 1st) பத்தரமுல்ல பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தினர் மீது பொலிஸார் நீர்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக பொலிஸாரால் நீர்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். பல கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் பத்தரமுல்ல, இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புத்ததாச விளையாட்டரங்கிற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்புப் பேரணி கல்வி அமைச்சு வரை சென்றுள்ளது.

ஏனைய செய்திகள்