ட்ரம்ப் - கிம் உச்சிமாநாடு இணக்கப்பாடின்றி நிறைவு

அமெரிக்க - வட கொரிய ஜனாதிபதிகள் இடையிலான உச்சிமாநாடு இணக்கப்பாடின்றி நிறைவு

by Chandrasekaram Chandravadani 28-02-2019 | 1:08 PM
Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் ஆகியோருக்கு இடையிலான உச்சிமாநாடு இணக்கப்பாடின்றி நிறைவுபெற்றுள்ளதாக, வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது. குறித்த உச்சிமாநாட்டின்போது, எந்தவொரு ஒப்பந்தமும் எட்டப்படவில்லை எனவும் ஆனால், இதற்குப் பொறுப்பான குழுக்கள் பின்னர் சந்தித்துப் பேசவுள்ளார்கள் எனவும் வௌ்ளை மாளிகைப் பேச்சாளர் சாரா சண்டர்ஸ் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அணு ஆயுதத்தை முழுமையாக கைவிட வட கொரியா ஒப்புக்கொள்ளுமா என்பதே பேச்சுவார்த்தையின் முக்கிய விடயமாக அமைந்திருந்தது. இதேவேளை, வியட்நாமின் உபசரிப்பை பெரிதும் பாராட்டியதாகவும் வட கொரிய ஜனாதிபதியுடனான முக்கிய சந்திப்பை வியட்நாமில் நடாத்துவதில் பெருமையடைவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இச் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தமைக்கு வியட்நாமுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கிம் ஜோங் உன் ஆகியோருக்கு இடையிலான இரண்டாவது உச்சிமாநாடு வியட்நாமில் நேற்று ஆரம்பமானது. இவர்களுக்கு இடையிலான முதலாவது உச்சிமாநாடு, கடந்த வருடம் சிங்கப்பூரில் இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.  

ஏனைய செய்திகள்