பாக்கு நீரிணையை மீட்குமாறு தமிழக முதல்வர் கோரிக்கை

பாக்கு நீரிணையை மீட்குமாறு பாரதப் பிரதமரிடம் தமிழக முதல்வர் வேண்டுகோள்

by Staff Writer 27-02-2019 | 5:40 PM
இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை இரத்து செய்து பாக்கு நீரிணையில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை மீட்குமாறு பாரதப் பிரதமரிடம் தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், அரசியலமைப்பு சட்டப்படி செல்லுபடியாகாது என உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதையும் தமிழக முதலர்வர் எடப்பாடி பாழனிச்சாமி சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த ஒப்பந்தங்களை இரத்து செய்யுமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் படகுகளையும் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் எடிப்பாடி பாழனிச்சாமி பாரதப் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் நாகப்பட்டினம், இராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 42 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களின் 26 படகுகளும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் பாரதப் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதேவேளை, கடந்த 21 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்களையும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.