நைஜீரிய ஜனாதிபதியாக மீண்டும் முஹம்மது புஹாரி

நைஜீரிய ஜனாதிபதியாக மீண்டும் முஹம்மது புஹாரி

by Chandrasekaram Chandravadani 27-02-2019 | 6:35 AM
Colombo (News 1st) நைஜீரிய ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி முஹம்மது புஹாரி (Muhammadu Buhari) வெற்றிபெற்றுள்ளார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள 76 வயதான முஹம்மது புஹாரி தமது இரண்டாவது 4 வருடங்களுக்குப் பதவி வகிக்கவுள்ளார். எதிராக போட்டியிட்ட முன்னாள் துணை ஜனாதிபதி அட்டிகு அபுபக்கரை விட 4 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் புஹாரி வெற்றிபெற்றுள்ளார். இருப்பினும், தேர்தல் முடிவுகளை அட்டிகு அபுபக்கரின், மக்கள் ஜனநாயகக் கட்சி நிராகரித்துள்ளது. வாக்கெடுப்புக்கு முன்னர் பாரிய வன்முறைகளும் தேர்தல் பிற்போடப்பட்ட சம்பவமும் இடம்பெற்றிருப்பினும், சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர்களால் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான எவ்வித சம்பவங்களும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், நடந்துமுடிந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 35 வீதமானவர்களே வாக்களித்திருந்ததாக, சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.