LNG மின்னுற்பத்தி நிலையத்தின் விலை மனு தொடர்பில் ஆராய குழு நியமனம்

by Staff Writer 26-02-2019 | 4:08 PM
Colombo (News 1st) கெரவலப்பிட்டிய LNG மின்னுற்பத்தி நிலையத்தின் விலை மனு தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் ஜனாதிபதியின் தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கையை ஒரு வாரத்திற்குள் வழங்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார். அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, மலிக் சமரவிக்ரம, ரவி கருணாநாயக்க மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு Tab வழங்கும் செயற்பாடு தொடர்பில் ஆராய்வதற்கும் ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. A தரத்திலான பாடசாலைகளுக்கு மாத்திரம் Tab-களை வழங்குவதற்கு இன்று நடைபெற்ற அமைச்சரைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.