ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அனுபமா

ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அனுபமா

by Bella Dalima 26-02-2019 | 3:58 PM
பிரேமம், கொடி படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த அனுபமாவின் புதிய தோற்றத்தால் ரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரேமம் படம் மூலம் பிரபலமானவர் அனுபமா பர​மேஸ்வரன். தமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடித்தார். அனுபமா தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அவர் தனது புதிய படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அனுபமாவுக்கு அழகே அவரது நீளமான சுருள் சுருளான கூந்தல் தான். அனுபமா தனது நீண்ட கூந்தலை வெட்டிவிட்டார். அனுபமா பரமேஸ்வரன் பெயரை சொன்னதுமே அவரின் நீண்ட அழகான கூந்தல் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். இந்நிலையில், அப்படி அழகாக இருந்த கூந்தலை இப்படியாக்கிவிட்டாரே என்று ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சில ரசிகர்கள் இந்த தோற்றமும் அழகாக இருப்பதாகக் கூறி அனுபமாவை உற்சாகப்படுத்தியுள்ளனர்.