.webp)
Colombo (News 1st)
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக போக்குவரத்து சபையின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். தனிப்பட்ட காரணங்கள் மற்றும் துறைசார் அமைச்சரின் அறிவுறுத்தலுக்கமைய ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அந்த அதுகாரி மேலும் தெரிவித்தார்.