by Staff Writer 25-02-2019 | 4:27 PM
Colombo (News 1st) மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பிலான வழக்கு நாளை (26) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்களின் காபன் பரிசோதனை அறிக்கை மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக கிடைக்காமையால் வழக்கு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், வட மாகாணத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதால் சட்டத்தரணிகள் மன்றுக்கு சமூகமளிக்கவில்லை.
இந்நிலையில், குறித்த வழக்கை நாளை வரை ஒத்திவைத்து, மன்னார் நீதவான் இ.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.