தென் மாகாண பொலிஸ் அதிகாரிகள் 10 பேருக்கு இடமாற்றம்

தென் மாகாண பொலிஸ் அதிகாரிகள் 10 பேருக்கு இடமாற்றம்

தென் மாகாண பொலிஸ் அதிகாரிகள் 10 பேருக்கு இடமாற்றம்

எழுத்தாளர் Fazlullah Mubarak

25 Feb, 2019 | 7:52 am

தென் மாகாண விசேட விசாரணை பிரிவிலுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 10 பேருக்கு இடமாற்றம் வழங்குவதற்கு இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

இவர்கள் மாத்தறை பகுதிக்கு வௌியிலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றுக்கு இடம் மாற்றம் வழங்குமாறு கோரி பொலிஸ் மாஅதிபருக்கு எழுத்து மூலம’ அறிவிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

தென் மாகாண விசேட விசாரணை பிரிவில் கடமையாற்றும் 25 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் அவர்களில் 15 பேருக்கு கடந்த தினத்தில் பொலிஸ் மாஅதிபரினால் மேல் மாகாணத்திற்கு இடமாறற்ம் வழங்கப்பட்டது.

இடமாற்றம் வழங்கப்பட்டவர்களில் 4 பேர் இதுவரை கடமைக்கு சமூகமழிக்கவில்லை.

இவர்கள் தொடர்ந்தும் கடமைக்கு சமூகமளிக்காவிடின் அவர்கள் சேவையிலிருந்து விளகிச்சென்றவர்கள் என கருதப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியச்சகர் ருவண் குணசேகர குறிப்பிட்டார்

இதேவேளை கடமைக்கு சமூகமளிக்காத பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் வீட்டாரிடம் வாக்குமூலம்பெற்றுகொள்ளுமாறு குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வசிக்கும் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

காலி ரத்கமவில் வர்த்தகர்கள் இருவர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட
சம்பவம் தொடர்பில் இன்று கைதுசெய்யப்பட்ட
தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் உப பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் கபில நிஷாந்த டி சில்வா மற்றும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் விராஜ் மதுஷங்க ஆகியோர் விளக்கமறியலில் வைக்ககப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
conta[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்