காஷ்மீர் தாக்குதல் மோடியின் சதியா ?

காஷ்மீர் தாக்குதல் பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மோடியின் சதியா ?

by Fazlullah Mubarak 25-02-2019 | 7:56 AM

காஷ்மீர் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்தும் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பில் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பாகிஸ்தானின் கராச்சியில் இடம்பெற்றுள்ளன.

காஷ்மீர் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, இந்தியாவின் நடவடிக்கைகள் விரோதப் பார்வையுடன் கூடியவை என விமர்சித்துள்ளார். பின்னர்,இந்த தாக்குதலானது "போரின் தீப்பிழம்புகளைத் தூண்டுவதாக அமைந்துள்ளது என காஷ்மீரின் பிராந்திய தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மே மாதம் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில் காஷ்மீர் படுகொலைகளுக்கு பழிவாங்கும் விதத்தில் பாதுகாப்புப் படைகளுக்கு தீர்மானங்களை எடுப்பதற்கு வழிவகுத்துள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் கருதுககின்றனர்.