பொலிஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு

போதைப்பொருளைக் கைப்பற்றிய பொலிஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு

by Staff Writer 24-02-2019 | 1:16 PM
Colombo (News 1st) பெருமளவு போதைப்பொருளைக் கைப்பற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவிற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டுத் தெரிவித்துள்ளார். போதைப்பொருளைக் கைப்பற்றிய அதிகாரிகளை பாராட்டும் வகையில் ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சுற்றிவளைப்புகளுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டுவிட்டர் பக்கத்தில் பதவிட்டுள்ளார்.