by Staff Writer 24-02-2019 | 12:52 PM
Colombo (News 1st) மோட்டார்சைக்கிளில் கடமைக்கு சென்றுகொண்டிருந்த பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியை பம்பலப்பிட்டியில் டிபென்டர் வாகனமொன்றில் மோதி விபத்துக்குள்ளாக்கியவர் தலைமறைவாகியுள்ளார்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான பொலிஸ் இன்ஸ்பெக்டர் தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்துக்குள்ளாக்கிய டிபென்டர் வாகனம் தலைமறைவாகியுள்ளதுடன், சாரதியை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.