பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கும் மத்திய வங்கி

சிறந்த பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி தெரிவிப்பு

by Staff Writer 24-02-2019 | 2:01 PM
Colombo (News 1st) நாட்டில் இந்த ஆண்டில் சிறந்த பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக, மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அரசியல் நெருக்கடிகள் காரணமாக, பொருளாதார வளர்ச்சியின் வேகம் 3 சதவீதம் வரை வீழ்ச்சிகண்டதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இலங்கையின் பணவீக்கத்தை 4 சதவீதத்திற்கும் 6 சதவீதத்திற்கும் இடைப்பட்ட மட்டத்தில் பேண முடிந்துள்ளதாகவும் ரூபாவின் பெறுமதி ஸ்திரத் தன்மையில் உள்ளதாகவும் மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.