சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 24-02-2019 | 6:15 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. தண்டனைகளை பிரேரிக்கும் போது சபாநாயகருக்கும் நிச்சயமாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என பா.உ. ஷெகான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 02. அரசியலமைப்புப் பேரவையில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவாகவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். 03. கடந்த 4 வருட காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்களை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 2 வாரங்களுக்குள் 185 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 04. பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவின் அறிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 05. போதைப்பொருள் கடத்தல்காரரான கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் என கூறப்படும் மொஹமட் நௌஃபர் மொஹமட் அலி கைது செய்யப்பட்டுள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. பெங்களூரில் சிகரட் துண்டினால் ஏற்பட்ட தீ விபத்தில், 300-இற்கும் அதிகமான கார்கள் தீக்கிரையாகியுள்ளன. 02. இந்தியாவின் அசாம் மாநிலத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 85 பேர் உயிரிழந்துள்ளனர். விளையாட்டுச் செய்திகள் 01. சர்வதேச இருபதுக்கு இருபது (T20) அரங்கில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்த அணியாக ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை படைத்துள்ளது. 02. தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றிகொண்ட முதல் ஆசிய அணியாக இலங்கை சாதனை படைத்துள்ளது.